Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2017 செப்டெம்பர் 29 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. பீ.எஸ்.எம்.சார்ள்ஸின் முயற்சியால், பெரியநீலாவணைச் சந்தியில் இருந்து துறைநீலாவணைக்கு செல்லும், பிரதான வீதிக்கு 1.4 மில்லியன் ரூபாய் செலவில் தெரு மின்விளக்கு பொருத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
துறைநீலாவணைக் கிராமத்தின் பிரதிநிகளை மாவட்ட செயலகத்துக்கு, நேற்று (28 அழைத்த, மாவட்ட செயலாளர், தெரு மின்விளக்கப் பொருத்தும் வேலையை உடனடியாக ஆரம்பிப்பதற்கான அனுமதிக்கடிதத்தை பிரதிநிதிகளிடம் வழங்கிவைத்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலகப்பிரிவில் உள்ள துறைநீலாவணைக் கிராமத்தின் குறைபாடுகளை நிவர்த்திசெய்வது தொடர்பாக துறைநீலாவணைக் கிராமத்தின் பிரதிநிகளான ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் தலைவராக இருந்த அதிபர் மு.இராஜகோபால், கண்ணகி அம்மன் ஆலயத்தின் தலைவர் கி.விஜயகுமார், மாரியம்மன் ஆலயத்தின் தலைவர்களான நாகப்பன்-மாணிக்கராசா, கே.யோகராசா,வருமானவரி உத்தியோகஸ்தர் கந்தையா-குணரெத்தினம், ஊடகவியலாளர்கள் சா.நடனசபேசன், க.விஜயரெத்தினம், கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் தி.தயாளன், ஆசிரியர்களான சா.ஆசைத்தம்பி, சா.கருணாநிதி, சமாதான நீதவான் மு.புஸ்கரன், அம்பிகை மகளீர் சங்கத்தின் தலைவர்,செயலாளர்களான திருமதி. விமலேஸ்வரி,திருமதி கமலம் இரத்தினராசா, ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பொருளாளர் தே.முகுந்தன், முன்னாள் செயலாளர் க.சதுர்சன் உள்ளிட்ட குழுவினர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம் .சார்ள்ஸை, இவ்வருடம் ஏப்ரல் 11 ஆம் திகதி மாவட்டசெயலகத்தில் சந்தித்து கிராமத்தின் தேவைகளைத் தெரியப்படுத்தியிருந்தனர்.
இதன்பிரகாரம் துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீதிக்கான தெருமின்விளக்கு கட்டாயம் பொருத்தித் தருவாதாக உறுதியளித்து இருந்த மாவட்ட செயலாளர், ரூ.1.4 மில்லியன் செலவில் மின்விளக்கு பொருத்துவதற்கான அனுதியைப் பெற்று, அவ்வேலையை உடனடியாக ஆரம்பிப்பதற்கு மாவட்ட மின் பொறியியலாளரிடம், மாவட்ட செயலாளர் உத்திரவிட்டதுடன் அந்த அனுமதிக்கடித்தின் பிரதியையும் பொறியியலாளரிடம் வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில், மாவட்டசெயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்சழியன் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.சுதர்சன், ஏ.சுதாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அதேவேளை, துறைநீலாவணை மக்களின் நன்மை கருதி பெரிய நீலாவணைச் சந்தியில் இருந்து துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீதிக்கு தெருமின்விளக்குப் பொருத்துவதற்கான ஒழுங்கினை செய்துதந்த அரச அதிபர் திட்டமிடல் பணிப்பாளர் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் அனைவருக்கும் துறைநீலாவணை மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago