Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்
பிரத்தியேக தனியார் கல்வி நிலையங்களின் ஆசிரியர்கள், ஒரு மணித்தியாலத்துக்கு பத்து ரூபாய்க்கு மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு ஆயத்தமென்றால், புதிய கட்டடமொன்றை, மட்டக்களப்பு மாநகர சபை நிர்மாணித்துத் தருமென, மேயர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள பிரத்தியேக கல்வி நிலையங்கள், கால்நடைகளை அடைக்கும் கூடுகள் போன்று காணப்படுவதாகவும், அவர் விசனம் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த மேயர் கூறுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியை வியாபாரமாக மாற்றி விட்டார்கள் என்றும் ஒரு மணித்தியாலயத்துக்கு 50 ரூபாய் அல்லது 40 ரூபாய் அறிவிடுகின்றனர் என்றும், கவலை தெரிவித்தார்.
அத்துடன், மாநகர சபை கட்டித்தருகின்ற பிரத்தியேக கல்வி நிலையங்களில், அவர்கள் படிப்பிக்கட்டும் என்றும் ஆனால், ஒரு மாணவரிடத்தில் ஒரு மணித்தியாலயத்துக்கு பத்து ரூபாய் தான் இவர்கள் அறவிட வேண்டுமென்றும் மேயர் தெரிவித்தார்.
பிரத்தியேக கல்வி நிலையங்கள் நடத்துவதாயின் சில விதிமுறைகள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய மேயர், பிரத்தியே கல்வி நிலைய உரிமையாளார்களை அழைத்து, அறிவுறுத்தல் வழங்கிய போதும், அவர்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லையென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago