2025 மே 14, புதன்கிழமை

ரூ.51 மில்லியன் செலவில் வாய்க்கால் புனரமைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில், சுமார் 51 மில்லியன் ரூபாய் செலவில், ஐந்து கிலோமீற்றர் நீளமான நீர்ப்பாசன வாய்க்கால் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக நீர்ப்பாசனத்  திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீ. மோகனராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில், இன்று (12) கருத்து வெளியிட்ட அவர், மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிக நீளமான நவகிரி பிரிவு ரீ-10 நீர்ப்பாசன வாய்க்கால் புனரப்பு வேலைகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், மிகவும் அதிகத் தொகையில், ஒரு நீர்ப்பாசனத் திட்ட வாய்க்கால் புனரமைப்புச் செய்யப்படுவது இதுவே முதற் முறையாகும் என்றும் குறிப்பிட்ட அவர், இந்த வாய்க்கால் புனரமைப்பின் ஊடாக, சுமார் 1,500 ஏக்கர் நெற் செய்கையை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .