2025 மே 26, திங்கட்கிழமை

வாகனேரியில் 6 மாதங்களுக்கு மணல் அகழ்வுக்குத் தடை

Suganthini Ratnam   / 2017 மே 17 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, வாகனேரிப் பிரதேசத்தில் மண் அகழ்வைத் தடுக்கும் வகையில்  6 மாதகாலம் தடை விதிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  
 
கோறளைப்பற்றுத் தெற்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கிராமியப் பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோரின் இணைத் தலைமையில் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தின்போது, வாகனேரியில் இடம்பெறும் மணல் அகழ்வு தொடர்பில் ஆராயப்பட்டது.  

இரவு வேளைகளில் வாகனேரியில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு புணானை, சிவத்தக்கிணறு என்ற இடத்தினூடாக வெளி மாவட்டங்களுக்கு மணல் கொண்டு செல்லப்படுகின்றது.

இங்கு அகழப்படும் மணல் கொழும்புக்கும் கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஒரு டிப்பர் மணல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுக்கின்றது என தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இதனை அடுத்து, மேற்படி தடை விதிப்பதற்கு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X