Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, சீலாமுனைக் கிராமத்தில்; வாகனச் சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவநாதன், சனிக்கிழமை (17) உத்தரவிட்டார்.
ஆனந்தா ஒழுங்கையில் கடந்த வியாழக்கிழமை (15) இரவு ஒரு பிள்ளையின் தந்தையான சோமசிறி விஜித் ஜெயந்த் (வயது 34) என்பவரே கொலை செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவரை பின்தொடர்ந்த இருவர், இவரை வாளால் வெட்டிக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் இரண்டு மணித்தியாலங்களின்; பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்படி சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
இவ்வாறிருக்க, இவரது சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
16 minute ago
17 minute ago
37 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
17 minute ago
37 minute ago
3 hours ago