2025 மே 26, திங்கட்கிழமை

வெசாக் நிகழ்வுக்கு அழைப்பு

Suganthini Ratnam   / 2017 மே 09 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகள் அற்ற வெசாக்தின ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அப்பேரவையின் விழாக் குழுத் தலைவர் எம்.எஸ்.அபுல் ஹஸன் தெரிவித்தார்.

வெசாக் விடுமுறை தினமான நாளை, மட்டக்களப்பு நகர பொலிஸ் நிலைய முன்றலில் மாலை 6 மணி முதல் வெசாக் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கு அனைவரும் அழைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் கூறினார்.

பன்மைத்துவ கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களுடன் பல் இனங்கள் ஒன்றிணைந்து வாழும் இந்நாட்டில் அடுத்த சமூகத்தவரின் கலாசாரப் பண்பாட்டு வாழ்வியல் அம்சங்கள் குறித்து அறியவும் பரஸ்பர புரிந்துணர்வுடன் நடக்கவும் இத்தகைய நிகழ்வுகள் அவசியம் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X