Suganthini Ratnam / 2016 ஜூலை 11 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்
கனேடிய மற்றும் இந்திய பல்கலைக்;கழக விரிவுரையாளர்கள் கலந்துகொள்ளும் விசேட அதிதிகளின் உரை, நாளை மறுதினம் புதன்கிழமை பிற்பகல் 02 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில்; நடைபெறவுள்ளது.
'சமூக விஞ்ஞானங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஜனநாயகம்: சில வினாக்களும் சவால்களும்' என்ற தலைப்பில் உரை நடைபெறவுள்ளது.
அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் தலைமையிலும் கலாநிதி தர்ஷன் அம்பலவாணரின் ஏற்பாட்டிலும் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பேராசிரியர் பவானி ராமன் (வரலாற்று மற்றும் கலாசார ஆய்வுகள் துறை -ரொரன்றோ பல்கலைக்கழகம்) மானுடவியல் பேராசிரியர் பிரான்சிஸ் கோடி, (ஆசிய ஆய்வுகளுக்கான நிலையம்) கலாநிதி செந்தில் பாபு, (விஞ்ஞானக்கற்கைள் -பிரெஞ்சு நிறுவகம், பாண்டிச்சேரி) ஆகியோர் விரிவுரையாற்றவுள்ளனர்.
இதில் மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியலாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago