2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்துகளைத் தடுக்க மேலும் உயரத்தடைகள்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரப் பகுதியில் அடிக்கடி இடம்பெறும் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக மேலும் சற்று உயரமான வேகத்தடைத் திட்டுக்கள் இடப்படுவதாக காத்தான்குடி வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வேலைகள் வீதி அபிவிருத்தித் திணைக்களத்துடன் இணைந்து நேற்று வியாழக்கிழமை  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி நகரத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக ஏற்கெனவே, கடந்த மாதம் காத்தான்குடி நகர மத்தி பிரதான நெடுஞ்சாலையில் சற்று மிதமான வீதித் தடைத் திட்டுக்கள் போடப்பட்டன. ஆயினும், அதனையும் தாண்டி வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும் விரைந்து செல்வதால் அதிகரித்த வேகத்தின் காரணமாக பாரிய விபத்துக்கள் இடம்பெறக் கூடிய சாத்தியங்கள் காணப்பட்டதால் தற்போது வீதியின் மத்தியில் சற்று

உயரமான வேகத்தடைத் திட்டுக்கள் இடப்படுகின்றன. இதன் மூலம் அதிகரித்த வேகத்தினால் உண்டாகும் வீதி விபத்துக்களை ஓரளவு தடுக்கலாம் என காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் நம்புகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X