Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 மார்ச் 12 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு பதுளை வீதி பன்குடாவெளி சந்தியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணித்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நெல்லிப்போடியார் கிராமத்தைச் சேர்ந்த தங்கேஸ்வரன் கௌசிகன் (வயது 22) என்ற மெக்கானிக் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இலுப்படிச்சேனையிலுள்ள சீடி விற்பனை நிலையத்துக்கு திரைப்பட இறுவட்டு வாங்குவதற்காக சென்றவர். இறுவட்டை வாங்கிக் கொண்டு திரும்பி வீட்டுக்கு வரும் வழியில் பங்குடாவெளிச் சந்திக்கும் தளவாய் வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் வீதியருகே இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
படுகாயமடைந்தவர் வீதியின் நடுவே வீச்ப்பட்டுக் கிடப்பதை அறிந்த ஊரவர்கள் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
உறவினர்கள் படுகாயம் பட்டவரை உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து வந்த போதிலும் அவரது உயிரிழந்து விட்டார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் சனிக்கிழமை பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago
7 hours ago