Suganthini Ratnam / 2016 ஜூலை 31 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கரவண்டி தடம்புரண்டதில் அதன் சாரதியான காத்தான்குடி நகர பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.அப்துல் லத்தீப் (வயது - 54) என்பவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி கலாசார மண்டபத்துக்கு முன்னாலுள்ள பிரதான வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றது.
இதில் படுகாயமடைந்த சாரதி காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி முற்றாகச் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
13 minute ago
28 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
31 minute ago
46 minute ago