Suganthini Ratnam / 2016 ஜூலை 10 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு ஏறாவூர், புன்னைக்குடா வீதியில் நேற்றுச் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பொலன்னறுவை மாவட்டத்தின் அத்துல்கல கிராமத்தைச் சேர்ந்த அரபுக் கல்லூரி மாணவனான முஹம்மத் அஸ்ஹர் (வயது 21) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நோன்புப் பெருநாள் விடுமுறையில் ஏறாவூரிலுள்ள தனது நண்பனைச் சந்திப்பதற்காக இந்த மாணவன் ஏறாவூருக்கு வந்து வீதியில் நடந்துசென்று கொண்டிருந்த வேளையால் அவ்வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த மாணவர் மீது மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த மாணவன் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago