Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Niroshini / 2017 மே 06 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தம்பிப்பிள்ளை தவக்குமார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு சிலரின் தலையீட்டால் இடைநிறுதப்பட்டிருந்த களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தின் வேலைகளை உடனடியாக ஆரம்பிக்கும் படி, நேற்று (05) பிரதமர் ரணில் விக்கிரமசிக்கவின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்ததாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளரும் வணிகத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையத்தினை களுதாவளை பிரதேத்தில் அமைப்பதன் மூலம் அப்பிரதேசத்தை அண்டிய பல கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் விவசாய மற்றும் ஏனைய பொருட்களை உத்தரவளிக்கப்பட்ட அரச நிர்ணய விலைகளுக்கு விற்பனை செய்வதற்கு இந்த பொருளாதார மத்திய நிலையம் அமையும்.
இல்லாவிட்டால் எமது மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வேறு மாவட்டங்களுக்கு அவர்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியில் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டியுள்ளது.
இப்படியான மத்திய நிலையங்களை எமது மாவட்டங்களில் அமையவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில அரசியல்வாதிகள் மாவட்ட அபிவிருத்திக்கூட்டத்தில் மீள்பரிசீலனை செய்யக் கோரியிருந்தனர்.
இந்நிலையில், களுதாவளையில் இந்த பொருளாதார மத்திய நிலையம் அமையவிருப்பது மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களுக்கு நல்லதாக அமையும் எனவும் தெரிவித்தார்.
இந்த பொருளாதார மத்திய நிலையத்தினை களுதாவளை பிரதேசத்தில் அமைப்பதற்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களும் தனது முயறசியினாலும் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் இதற்கான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
25 May 2025