2025 மே 14, புதன்கிழமை

வாழைச்சேனையில் சிறுவர் மகளிர் பணியகம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

பொலிஸ் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் மகளிர் பணியகம் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ்,உதவி பொலிஸ் அத்தியட்சகர் விதானகே மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன,

சிறுவர் மகளிர் அபிவிருத்தி அமைச்சின் ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட இக் கட்டடம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குள் ஏற்படும் சிறுவர் மற்றும் மகளிர் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச செயலகங்களோடு இணைந்து தீர்வை பெற்றுக் கொடுப்பதே சிறுவர் மகளிர் பணியகத்தின் சேவையாக இருக்கும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X