2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 11 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் களையப்பட வேண்டுமென்று வலுயுறுத்தி மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்குப்  பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பட்டிப்பளைச் சந்தியிலிருந்து ஆரம்பமாகிய ஊர்வலம், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபம் வரை சென்றது.  
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் துன்புறுத்தல்கள், உரிமை மீறல்கள்  மற்றும் வன்முறைகள் களையப்பட வேண்டுமென்று வலியுறுத்தி கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றில் சூர்யா பெண்கள் அமைப்பின் கலைக்குழுவின் நாடகமும் இதன்போது நடைபெற்றது.  

'ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் பெண்களை நிம்மதியாக வாழவிடு', 'பெண்களை துஷ்பிரயோகம் செய்யாதே', 'எமக்கு வேண்டாம் பாலியல் துஷ்பிரயோகம்', 'எமக்கு வேண்டும் சுதந்திரமான வாழ்க்கை', 'பெற்றோரே இளவயது திருமணம் எமக்கு வேண்டாம்', 'சமூக, பொருளாதார, அரசியல்களில் எமக்கும் பங்களிப்பு வேண்டும்', 'பெண்கள் நாட்டின் கண்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X