2025 மே 14, புதன்கிழமை

விழிப்புணர்வு செயலமர்வு

Niroshini   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு ,போதீவுப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த கால் நடை வளர்ப்பாளர்களுக்கு அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று திங்கட்கிழமை தும்பங்கேணி கால்நடை அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 கால்நடை வளர்ப்பாளர்கள், அக்ரெட் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் கஜேந்திரன் , போரதீவுப்பற்று பிரதேச மட்டுப் படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் நிருவாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
இதில், அனர்த்த முகாமைத்துவ பயிற்று விப்பாளர் செ.ரமேஸ்வரன் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்.
 
இதன்போது வெள்ள அனர்த்த காலங்களிலும் ஏனைய இடர் நிலை காலங்களிலும் ஆடு, மாடு, மற்றும் கோழிகள் போற்றவற்றை எவ்வாறு பாதுகாத்தல்,மின்னல் தாக்கங்களிலிருந்து எவ்வாறு பாதுகாத்தல்,அனர்த்தங்களை எதிர்கொள்ளக் கூடிய வகையில் எவ்வாறு முற்கூட்டியே தயார் செய்திருத்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X