2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வெவ்வேறு விபத்துகளில் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 06 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.ஹனீபா

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற வௌ;வேறு விபத்துகளில் 04 பேர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதான வீதி எல்லைப்பகுதியில் முச்சக்கரவண்டியும்  மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், காயமடைந்த 02 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் சாரதியான முஹம்மத் வாஹித் (வயது 50) மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த பி.ஜீவிதா (வயது 29) ஆகியோர் காயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பி.ஜீவிதா என்பவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, மஞ்சந்தொடுவாய்ப் பிரதேசத்தில் பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், காத்தான்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த கச்சி முஹம்மது (வயது 57) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே இந்த விபத்தில் படுகாயமடைந்ததாக பொலிஸார் கூறினர்;.

மேலும் அம்பாறை, சவளக்கடைப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும்; மோதி விபத்துக்குள்ளானதில் பெரியநீலாவணைப் பிரதேசத்தைச் சேர்ந்த திலகேஸ்வரி ரூபன் (வயது 37) என்பவர் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து குறித்த  முச்சக்கரவண்டிச் சாரதியை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முச்சக்கரவண்டிச் சாரதி மதுபோதையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்துகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X