2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வா.கிருஸ்ணா

அதிகாரிகளால் தங்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் எவையும் சரியாக நிறைவேற்றப்படுவது இல்லை எனக் கூறி மட்டக்களப்பு, உன்னிச்சைக்குள நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் பெரும்போகச் செய்கைக்கான கூட்டம் நடைபெற்றபோது, அதில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இக்கூட்டத்தை விவசாயிகள் பகிஷ்கரித்து பிரதேச செயலக வளாகத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவிக்கையில், 'கடந்த 20ஆம் திகதி பெரும்போகச் செய்கைக்கான கூட்டம் நடத்துவதாக விவசாயிகளுடன் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்பட்டது. ஆனால், பின்னர் அந்தத் திகதி அரசியல்வாதிகளின் சௌகரியத்துக்கேற்ப இன்றையதினம் என்று மாற்றப்பட்டது' என்றனர்.  

இக்கூட்டத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், எஸ்.யோகேஸ்வரன், மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா உள்ளிட்டோரை வழிமறித்து விவசாயிகள் தங்களின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X