2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வடிகான்கள் துப்புரவாக்கும் பணிகள் ஆரம்பம்

Gavitha   / 2016 மார்ச் 21 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன்

மட்டக்களப்பு - ஏறாவூர் நகர சபை பிரிவுக்குட்பட்ட எல்லை நகர் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை பிரிவிலுள்ள செங்கலடி ஆகிய பிரதேசங்களிலுள்ள நீர் வடிந்தோடும் பிரதான நீரோடைகளைத் துப்புரவு செய்யும் பணிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) ஆரம்பிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குறித்த பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

'ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை ஆகிய இரு பெரும் பிரிவிலுள்ள நகர பிரதேசங்களின் வடிகான்கள், நீரோடுமிடங்கள் முழுமையாக செப்பனிடப்படும் போது, டெங்கு நுளம்புப் பெருக்கத்திலிருந்து பிரதேசத்தை பாதுகாக்கவும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கவும் முடியும்' என்று நாடாளுமன்ற இதன்போது தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X