2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’வடமாகாணசபையில் ஏற்பட்டுள்ள சுமூகமற்ற நிலைமையால் த.தே.கூவுக்குள் பிரிவு ஏற்படக்கூடாது’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 21 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

வட மாகாணசபையில் ஏற்பட்டுள்ள சுமூகமற்ற நிலைமை, மிக விரைவில் சுமூகமான நிலைமைக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், இந்த விடயம் காரணமாக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்குள்; பிரிவு ஏற்படக்கூடாது எனவும் கூறினார்.

மட்டக்களப்பு, பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ்க்; கலவன் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'மலையகத்தைப் பொறுத்தவரையில்  கடந்த காலத்தில் நாங்கள் பிரிந்துநின்று செயற்பட்டதன் காரணமாக எமக்குக் கிடைக்க வேண்டிய பல்வேறு உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது. இதன் காரணமாக தற்பொழுது நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி, அனைவரும் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். அதனால், நாம் பல வெற்றிகளையும் பெற்றுள்ளோம்' என்றார்.

'எனவே, தமிழ் மக்கள் செறிந்து வாழும்  வடமாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மாற வேண்டும். தமிழர்களைப் பிரிப்பதற்காக இன்று பலர் கங்கனம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள். வட மாகாணசபையில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் பிரிப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதற்கு இடமளிக்கக்கூடாது

'வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் எதிர்க்கட்சித் தலைவரும்  தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் மிகவும் மதிக்கக்கூடியவர்களாக உள்ளனர். இவர்கள் இருவருக்குமிடையில் ஒற்றுமை ஏற்பட்டு, தமிழர்கள் தமது சொந்த மண்ணை ஆளக்கூடிய நிலைமை ஏற்பட வேண்டுமே தவிர, பிரிந்து மாகாணத்தை சின்னாபின்னமாக்குவதற்கு நடவடிக்கை  மேற்கொள்ளப்படக்கூடாது

'சில இடங்களில் தமிழர்கள் சிறுபான்மையாக இருந்தாலும், பல இடங்களில் சிறுபான்மையாக இருக்கின்றனர். வட மாகாணத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு என்பதுடன், அதை நாங்கள் சரியான முறையில் கையாள வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X