Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 18 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டு வழிநடத்தும் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையானது சமரசமாகத் தீர்க்கப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அதில் ஈடுபட்டவர்கள் தார்மீகமாக விலகிச்செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில்; உள்ளது எனத் தெரிவித்த அவர், இந்த விசாரணையானது பக்கச்சார்பில்லாமல் நடுநிலையாக இருக்கும் பட்சத்தில் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதில் தாமதம் இருக்கக்கூடாது எனவும் கூறினார்.
மட்டக்களப்பில் சனிக்கிழமை (17) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'நான்கு அமைச்சர்களையும் வழிநடத்திச் செல்கின்றவர் என்ற வகையில், வடமாகாண முதலமைச்சர் சி.விவிக்னேஸ்வரனுக்கு சில தார்மீகப் பொறுப்புகள் இருக்கின்றன. அமைச்சர் ஒருவர் மீது சிற்சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது, சிறு கருத்துப் பரிமாறல்களுடன் அவர் முளையில் கிள்ளியெறிந்திருக்கலாம்.
ஒட்டுமெத்தமாக நான்கு பேரையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் நிலைமை ஏற்படும் பட்சத்தில், மேற்பார்வையில் குறைபாடுகள் இருக்கின்றதா அல்லது கட்டுப்படுத்துவதற்கு தாமதமாகியுள்ளதா போன்ற கேள்விகளை அவரிடம் கேட்கும் நிலைமை மக்களுக்கு இருக்கின்றது' என்றார்.
'வடமாகாணசபையில்; முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புத்திஜீவி என்ற அடிப்படையில், அமைச்சர்களை ஒன்றிணைத்து வழிகாட்டியாக நடத்திச்செல்லும் தலைமைப்பீடத்தில் உள்ளார்.
நான்கு அமைச்சர்கள் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இருவர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு அவர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்ய வேண்டும் என்றும் ஏனைய இருவரும் குற்றவாளிகளாக இனங்காணப்படும் முன்பே அவர்கள் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வடமாகாணசபையில் இதன் காரணமாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் தன்னிச்சையாக செயற்பட்டு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத்; தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்கள்.
இந்தத் தீர்மானம் சரியா, பிழையா என்பதை விட, இது தமிழ் மக்கள் மற்றும் தமிழ்க் கட்சிகள் மத்தியிலுள்ள ஒற்றுமையைப் பலவீனப்படுத்தும் என்ற போக்கு எமது பார்வையில் தெரிகின்றது. இப்பிரச்சினையை சமரசமாகத் தீர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் உள்ளிட்டோரால் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது. ஏனெனில், தமிழர்களின் பலமாகக் காணப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையக்கூடாது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
15 minute ago
29 minute ago