Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 21 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, வ.சக்தி
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் காணப்படுகின்ற தூர்ந்து போயுள்ள வடிகான்களை சுத்தப்படுத்திப் புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கான அங்கிகாரத்தை, கிழக்கு மாகாண ஆளுநர், மாநகர மேயருக்கு வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல், திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலாகத்தில் நேற்று (20) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், மட்டக்களப்பிலுள்ள வடிகான்கள் முகாமைத்துவம் குறித்து மேயரால் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. வெள்ள காலங்களில் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் பற்றியும், அதற்குத் தீர்வாக வடிகான்கள் அமைப்பு முறை, பராமரிப்புகுறித்தும் கலந்துரையாடப்பட்டன.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, வடிகான்கள் நிரம்பி வழிந்து மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண பல நடவடிக்கைகள் நகர மேயரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் மட்டக்களப்பு மாநகர எல்லையில் முழுமைத்துவமான வடிகான்கள் அமைப்பு, வடிகான்கள் பராமரிப்பு பற்றிய திட்டங்கள் அமைந்துள்ளன.
மேற்படி கலந்துரையாடலில், திட்டங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்த ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .