Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 12 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ், நல்லதம்பி நித்தியானந்தன்
குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தம் வேண்டும், பாலியல் குற்றத்துக்குத் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துஈ கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக முன்றலில், மனிதச் சங்கிலிப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தின்போது மூதூர், பெரியவெளிக் கிராமத்தில் மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், பல்கலைக்கழக மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு மாணவி அஜந்தினி வன்னியசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், “பெரியவெளிக் கிராமத்தில் மூன்று சிறுமிகள் மீதான வன்புணர்வுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையின் மூலம், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாதிருக்க வேண்டும்.
“ஏற்கெனவே இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கியிருந்தால், இவ்வாறான வன்புணர்வுச் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்றிருக்காது.
“மேலும், இந்த நல்லாட்சியில் அங்கத்தவர்களாக இருக்கும் சமூக உறுப்பினர்கள், இவ்வாறான பிரச்சினைகளுக்கு சிறந்த முடிவை எட்டி, சிறுவர்கள் மற்றும் பெண்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago