2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வர்த்தக நிலையத்திலும் வீட்டிலும் திருட்டு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 16 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தகம் நிலையமொன்றிலும் வீடொன்றிலும்  செவ்வாய்க்கிழமை (15) நள்ளிரவு திருட்டுப் போயுள்ளதாக உரிமையாளர்கள் முறைப்பாடு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை முறைப்பாடு செய்துள்ளனர்.  

மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு முன்பாகவுள்ள வர்த்தக நிலையத்திலும் கோவிந்தன் வீதியிலுள்ள வீடொன்றிலுமே திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  

இதன்போது, வர்த்தக நிலையத்திலிருந்து சிகரெட்டுகள் திருடப்பட்டுள்ள அதேவேளை, குறித்த வீட்டிலிருந்து தங்கநகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X