2025 மே 03, சனிக்கிழமை

வர்ணந்தீட்டுதல் ஊடாக சிறுவர்களுக்கு விழிப்பூட்டல்

Editorial   / 2020 மே 16 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

வர்ணந்தீட்டும் செயற்பாட்டினூடாக, சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்பூட்டலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், வீடுகளில் முடங்கியிருக்கும் சிறுவர்களுக்கு, உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், ஓவியங்களுக்கு வர்ணந்தீட்டும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

இந்நிகழ்வு,  மாவட்டச் செயலக சிறுவர் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் வாயிலாக தெரிவுசெய்யப்படும் 25 சிறுவர்களால் வர்ணந்தீட்டப்பட்ட சிறந்த ஓவியங்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் வீ. குகதாசன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X