2025 மே 02, வெள்ளிக்கிழமை

வர்த்தக நிலையங்கள் திடீர் சோதனை

Editorial   / 2020 மே 20 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு உணவகங்கள், அழகுக்கலை நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள் உட்பட பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

குறித்த நிலையங்களின் சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக, மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தலைமையிலான சுகாதாரப் பிரிவு குழுவினர் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரத் திணைக்களம், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் ஆகியோருடன் இணைந்து, மட்டக்களப்பு மாநகரசபை இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தது.

பொது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.கிரிசுதன், மாநகர பிரதி ஆணையாளர் உ.சிவராஜா,  மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள், மட்டக்களப்பு மாநகரசபை உத்தியோகத்தர்கள், பொலிஸார் களத்திலிருந்தனர்.

சுகாதார துறையினரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பல வர்த்தக நிலையங்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X