2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

போஷாக்குக் குறைபாடுள்ள பிள்ளைகளின் தெரிவுசெய்யப்பட குடும்பங்களுக்கு, கோழி வளர்ப்புத் திட்டத்துக்கான  கோழிகளும் கோழிக்ஞ்சுகளும்  வழங்கும் நிகழ்வு, வவுணதீவு  அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்றது.

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள சிறார்களின் போஷாக்குத் தன்மையை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் , வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தால், இவை வழங்கப்பட்டன.

வவுணதீவு, கன்னங்குடா, மண்டபத்தடி, கொத்தியாபுலை, நாவல் தோட்டம், வாளக்காலை, சின்ன காள போட்ட மடு, பொன்னாங்காணி த் தோட்டம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 11 கிராமங்களில்  ஒரு குடும்பத்துக்கு 20 கோழிகளும் 5 குஞ்சுகளுமாக  25 கோழிகள்  வீதம்  3,200  நாட்டுக் கோழிகள், இதன்போது  வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், வவுணதீவு  அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரி வைத்தியர் திருமதி கே . சுபாசுகி , வவுணதீவு அபிவிருத்தி நிறுவன  வள அபிவிருத்தி முகாமையாளர் கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X