2025 மே 10, சனிக்கிழமை

வளங்கள் சார்ந்த முரண்பாடுகளுக்கு தீர்வு காண்தல்

Princiya Dixci   / 2022 மார்ச் 17 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை வளங்கள் சார்ந்த முரண்பாடுகளை அடையாளப்படுத்தி, அவற்றிற்கான தீர்வுகளை காண்பதற்கான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் நேற்று (16) இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட உயர் அதிகாரிகளும், பன்நாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கமும் இணைந்து வரலாற்று ரீதியான மற்றும் புவிச்சரிதவியல் பிரதேசங்களை வரைபடமாக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இவ்வேலைத் திட்டமானது இம்மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதப் பகுதிக்குள் வரைபடமாக்க திட்டமிட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான சுற்றுச்சூழலை அடையாளப்படுத்தி, நடைமுறை ரீதியிலான நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சட்டவிரோத மண் அகழ்வின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், வாவிகள் விரிவடைவது மட்டுமல்லாமல் விவசாயம்  மேற்கொள்ளும் வயல் நிலங்களும் பாதிப்படைவதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டல் தாவரங்களை அழிப்பதனால் நீர்வாழ் உயிரினங்கள் அழிவடைவதுடன், வாவியை நம்பி ஜீபனோபாயத்தில் ஈடுபடும் மீனவர்களின் தொழில் பாதிப்பும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலின்போது மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் புண்ணியமூர்த்தி சசிகலா, பிரதேச செயலாளர்கள், மாகாண பொறியியலாளர், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், சுற்றுச்சூழல் அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் ஏனைய துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X