2025 மே 03, சனிக்கிழமை

வாகனங்களுக்கு கிருமி தொற்று நீக்கல்

Editorial   / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -ஏ.எச்.ஏ. ஹுஸைன்  

மட்டக்களப்பு நகரையும் வவுணதீவுப்  பிரதேசத்தையும் இணைக்கும் வலையிறவு - வவுணதீவு வீதி வழியாகச் செல்லும் சகல வாகனங்களும் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வவுணதீவு பொலிஸ், விமானப்படை வவுணதீவுப் பிரதேச சபை நிர்வாகம் ஆகியவை இணைந்து இந்நடவடிக்கைய முன்னெடுத்து வருகின்றன.

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச சபையால், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு செயற்றிட்டமாக இது இடம்பெறுவதாக அச்சபையின் தவிசாளர் எஸ். சண்முகராஜா தெரிவித்தார்.

இதன்போது வவுணதீவு பிரதேசத்துக்குள் உள்நுளையும் சகல வாகனங்களும் அதேபோல வவுணதீவுப் பிரதேசத்திலிருந்து வெளிச்செல்லும் சகல வாகனங்களும் வவுணதீவுப்  பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களால் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நடவடிக்கையை வவுணதீவுப் பிரதேச மக்கள் பாராட்டியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X