Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2018 ஜூலை 20 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில், ஊர்காவல்துறையினருக்கு காணி வழங்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு கோரி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான சீ.யோகேஸ்வரன், வாகரை பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மாங்கன்று நடுவதற்காக ஊர்காவல் துறையினர் 25 ஏக்கர் காணி கோரி விண்ணப்பித்துள்ளதாக அறிகின்றேன்.
“இச்செயற்பாடுகள் மாகாண காணி ஆணையாளரின் ஆலோசனையில் இடம்பெறுகிறன. ஊர்காவல் துறையினருக்கு காணி இங்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தேவையெனில் அவர்கள் பொலனறுவை மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளலாம். ஏன் இங்கு இவர்கள் காணி கோர வேண்டும். அத்தோடு, இவர்களுக்கு இப்போது தொழில் மரம் நடுகை தொழிலா என சந்தேகிக்கத் தோன்றுகின்றது.
“உண்மையில் இதில் ஏதோ ஓர் இன ரீதியான திட்டம் அமைந்துள்ளது. எனவே, எமது மாவட்ட மக்கள் பலர் காணி இன்றி கஷ்ரப்படும் நிலையில், இவர்களுக்கு காணி வழங்க முடியாது.
“ஆகவே, பிரதேச செயலகம் இதற்கு காணி வழங்கும் செயற்பாட்டை நிறுத்த வேண்டுமெனக் கோருகின்றேன். பதிலை எதிர்பார்க்கின்றேன்” என, அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago