2025 மே 19, திங்கட்கிழமை

வாக்குகளைப் பெறுவதற்கு மதுபானம் வழங்குவதாக குற்றச்சாட்டு

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 பெப்ரவரி 10 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வாக்குகளைப் பெறுவதற்கு மதுபான போத்தல்களை வழங்குவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் தனது வாக்கை அளித்து விட்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “வாக்களிக்கும் நிலையத்துக்கு அருகாமையில் சில வேட்பாளர்கள் நின்று கொண்டு, வாக்களிக்க வரும் மக்களிடம் தங்களுடைய சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கூறி வருகின்றனர்” என்றார்.

மேலும், இதனைப் பொலிஸாரும் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது கவலையளிப்பதாகவும் தேர்தல் கண்காணிப்பு பகுதி இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X