Princiya Dixci / 2021 மே 13 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அடங்கலாக சகல நிறுவனங்களிலும் வாடிக்கையாளர்களை மட்டுப்படுத்தும் புதிய திட்டமொன்றை, இன்று (13) முதல் சுகாதாரப் பிரிவினர் நடைமுறைப்படுத்தினர்.
வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் பிரகாரம், நிறுவனமொன்றுக்குள் ஒரு தடவையில் நூற்றுக்கு 25 சதவீத வாடிக்கையாளர்கள் மாத்திரமே செல்லமுடியும்.
மட்டக்களப்பு நகரில் நிறுவனங்களுக்குள் ஒருதடவையில் செல்ல அனுமதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அடங்கிய பிரசுரங்கள், கோட்டைமுனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தலைமையில் நேற்றுக்காலை ஒட்டப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .