2025 மே 19, திங்கட்கிழமை

வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயம்

கனகராசா சரவணன்   / 2018 மார்ச் 17 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள குமாரபுரம் பகுதியில் குழுவொன்றின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மட்டு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், நேற்று (16) மாலை இடம்பெற்றதாக, பொலிஸார் தெரிவித்தனர் .

குமாரபுரம் குமாரகோவில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சுரேந்திரன் என்பவர், தனது வீட்டை நோக்கி,  மாலை 5.30 மணிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வீதியில் அவரை வழிமறித்த குழுவினர், அவர் மீது வாள் வெட்டை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, அவர் படுகாயமடைந்தததையடுத்து, அக்குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, படுகாயமடைந்தவரின் தம்பியுடன் வாள்வெட்டுக் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட சச்சையின் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X