2025 மே 14, புதன்கிழமை

வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் மீட்பு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கடலில் காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சி காரணமாக நான்கு வாரங்களின் பின்னர் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்ட குறித்த நான்கு கடற்றொழிலாளர்களும், அந்தமான் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதியன்று, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 7 நாள்கள் கடலில் மீன்பிடிக்கும் ஏற்பாடுகளுடன், நான்கு கடற்றொழிலாளர்கள், கடலுக்குச் சென்றிருந்தனர்.

எனினும், திட்டமிட்டபடி குறித்த கடற்றொழிலாளர்கள் கரை திரும்பாத நிலையில், சம்மந்தப்பட்ட உறவினர்களால் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக, கடற்றொழில் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இவ்விடயத்தில் கவனம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணித்ததுடன், இலங்கை மற்றும் இந்திய கடற் பாதுகாப்பு தரப்பினருக்கும் தகவலை தெரியப்படுத்தி, ஒத்துழைப்பைக் கோரியிருந்த நிலையில், தற்போது நான்கு கடற்றொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X