2025 மே 15, வியாழக்கிழமை

வாழைச்சேனை ‘காகித ஆலை மீண்டும் திறப்பு’

ஆர்.ஜெயஸ்ரீராம்   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது செயல் இழந்து காணப்படும் வாழைச்சேனை காகித ஆலையை மீண்டும் செயற்பட வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கைத்தொழில், வர்த்தகப் பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன தெரிவித்தார்.

வாழைச்சேனை காகித ஆலைக்கு நேற்று (03) மாலை நேரடி விஜயமொன்றை அவர் மேற்கொண்டிருந்த போதே, மேற்படி தெரிவித்தார்.

இதன் பிரகாரம், எதிர்வரும் டிசெம்பர் மாதமளவில், காகித ஆலையை இயக்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் சட்டதிட்டத்துக்கேற்ற முறையில் முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, ஒழுங்கான முறையில் இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதியமைச்சர், காகித ஆலையின் உத்தியோகஸ்த்தர்கள், ஊழியர்களுடன் தற்போதைய ஆலையின் நிலவரம் குறித்து கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.

வாழைச்சேனை காகித ஆலையானது, கடந்த 2 வருட காலமாக உற்பத்தி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல், ஆலையின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு, கைத்தொழில் அமைச்சால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .