Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மார்ச் 30 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.சரவணன்
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 15 வயது சிறுமியொருவர், சிறிய தந்தையினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
8 மாத கர்ப்பணியாகிய குறித்த சிறுமி சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த சிறுமியின் வீட்டை முற்றுகையிட்ட அதிகாரிகள் சிறுமியை மீட்டுள்ளனர்.
கொழும்பில் இருக்கும் சிறியதந்தையின் வீட்டுக்கு தனது தாயுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் சிறுமி சென்ற நிலையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கர்ப்பமடைந்த சிறுமி, தனது வீட்டுக்குள்ளே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
49 minute ago
59 minute ago