2025 மே 09, வெள்ளிக்கிழமை

வாழைச்சேனையில் திருடப்பட்ட லொறி கம்பஹாவில் மீட்பு

Princiya Dixci   / 2022 மே 22 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

வாழைச்சேனை கூட்டுறவு சங்க வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி திருடிச் செல்லப்பட்டிருந்த நிலையில், அந்த லொறி கம்பஹாவில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

கம்பஹாவின் கடுவல பிரதேசத்தில் கராச் ஒன்றிலிருந்து நேற்று (22) லொறி மீட்டுள்ளதுடன், கராச் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வசந்த பண்டார  தெரிவித்தார்.

பிறிமா முகவர் நிலையம் ஒன்றுக்குரிய குறித்த லொறியை, வழமைபோல கடந்த 9ஆம் திகதி இரவு கூட்டுறவு சங்க வாகன தரிப்பிடத்தில் சாரதி நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

மறுநாள் காலை வழமைபோல வாகன தரிப்பிடத்துக்கு சாரதி சென்றபோது அங்கு லொறி திருட்டுப் போயுள்ளதையடுத்து, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.

இது தொடர்பாக பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையில், வாகன தரிப்பிட காவலாளி இரவு கடமையை காலை 6 மணிக்கு முடித்துக் கொண்டு வீடு சென்ற நிலையில், பகல் காவலாளி காலை 7 மணிக்கு வந்து கடடையை ஏற்றுள்ளார். 6 தொடக்கம் 7 மணி வரையிலான ஒரு மணித்தியால இடைப்பட்ட நேரத்தில் அங்கு காவலாளிகள் இல்லாத நிலையில் லொறி திருட்டுப் போயுள்ளது.

இந்நிலையில், ரான்ஸ்போட் முகவர் ஒன்றின் உரிமையாளரான சம்பத் என்ற நபர், வேறு ஒரு சாவியை போட்டு லொறியை திருடிக் கொண்டு சென்று, குறித்த கராச்சில் வர்ணம் பூசவதற்காக விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார் எனவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டுள்ள கராச் உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்

லொறி, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X