2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

“வாழ்வாதார உதவிகளை முறையாக பயன்படுத்தவும்”

வடிவேல் சக்திவேல்   / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வாழ்வாதார உதவிகளை பெறும் பயனாளிகள், அதனை முறையாக பயன்படுத்த வேண்டும்” என்று, இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பெண்கள் தலைமை தாங்கும் 20 குடும்பங்களுக்கு, வாழ்வதார உதவிகளை கையளிக்கும் நிகழ்வு,  களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில், வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,  

 “எமது அமைப்பால், பலவகைப்பட்ட வாழ்வாதார உதவிகளை நாளாந்தம் வழங்கி வருகிறோம்.இவ்வாறான வாழ்வதார உதவிகளை பெறும் பயனாளிகள் அதனை முறையாக பயன்படுத்தாது, துஷ்பிரயோகம் செய்வதை நாம் நேரடியாகக் கண்டுள்ளோம்.  

எனவே, வாழ்வாதார உதவிகள் பெறும் பயனாளர்கள், இவ்வாறான விடயங்களை தவிர்க்க வேண்டும்.  வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக, அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்" எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .