Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கிராமத்தில் மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றுக்கு லண்டனை தளமாக கொண்டு இயங்கும் லண்டன் ஈழபதீஸ்வரர் கோவில் நிர்வாக சபையினரால் வீடு உட்பட 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதாரத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
களுவன்கேணி கிராமத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் பல குடும்பங்கள் வசிப்பதாக லண்டன் ஈழபதீஸ்வரர் கோவில் நிர்வாக சபையினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதற்கமைய, லண்டன் ஈழபதீஸ்வரர் கோவிலின் கிராமிய சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தெரிவுசெய்யப்பட்ட பயனாளியான கிருஸ்ணபிள்ளை நிமிலேஸ்வரி குடும்பத்துக்கு 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
லண்டனை ஈழபதீஸ்வரர் கோவில் நிர்வாக சபையின் உதவித் திட்டத்துக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் நாகராஜா ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் கலந்துகொண்டு, வீட்டை பயனாளியிடம் கையளித்தார்.
ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வேல் பரமதேவா மற்றும் லண்டனை ஈழபதீஸ்வரர் கோவில் நிர்வாக சபையின் உதவித் திட்டத்திற்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்களான நாகராஜா ஆனந்தராஜா, லோகநாதன் அனோஜன் ஆகியோர் இணைந்து வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்தனர்.
வசிப்பதற்கான வீடு, வாழ்வாதாரத்துக்கு ஆடுகள், கோழிகள், தாராக்கள், வளர்ப்பதற்கான நிரந்தரமான கூடு, தொழில் புரிவதற்காக சைக்கிள் என்பன வழங்கப்பட்டன.
வீட்டு உரிமையாளருக்கு கடந்த காலத்தில் மீன்பிடித்தொழிலில் ஏற்பட்ட நட்டம் காரணமாக பெற்ப்பட்ட கடனைச் செலுத்துவதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணமும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
31 minute ago
59 minute ago