2025 மே 10, சனிக்கிழமை

விதை நெல் வழங்கிவைப்பு

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 07 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி      

சிறுபோக வேளாண்மைச் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய, விவசாயிகளுக்கு அரைமானியத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய இனத்தைச் சேர்ந்த விதைநெல் வழங்கி வைக்கும் நிகழ்வு, இன்று (07) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலையடிவட்டை விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழுள்ள 40 ஏக்கருக்குரிய விதைநெல் இதன்போது விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

அப்பகுதி விவசாயப் பொதனாசிரியர் ரி.கோபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் வி.பேரின்பராசா மற்றும் உதவி விசாயப் பணிப்பாளர் த.மேகராசா உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு விதைநெல்லைப் பகிர்ந்தளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X