2025 மே 21, புதன்கிழமை

விதைநெல் மூடைகளுக்கு தீ வைப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 செப்டெம்பர் 27 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, பருத்திச்சேனையில் விவசாயத்துக்காக வைக்கப்பட்டிருந்த விதை நெல் மூடைகள், இனந்தெரியாத நபர்களால், திங்கட்கிழமை அதிகாலை தீயிட்டு  நாசமாக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பருத்திச்சேனை கிராம சேவை பிரிவை சேர்ந்த சுப்பிரமணியம் யுவராஜா என்ற விவசாயின்   விவசாயத்துக்கான சுமார்  1,60,000  ஆயிரம் ரூபாய் பெறுமதியான 39  விதை நெல் மூடைகளே, இவ்வாறு தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நெல் களஞ்சியசாலையின் பின்புறமாக உள்ள கம்பி வேலியை வெட்டி உள்நுழைந்தவர்கள், சைக்கிள் டியுப் மூலம் பெற்றோலை களஞ்சிய சாலைக்குள்  ஊற்றி நெல் மூடைகளுக்குத் தீயிட்டுள்ளதாகத் தெரிவித்த வவுணதீவு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .