2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

‘வினைத்திறனான சேவையை மக்களுக்கு வழங்குவோம்’

Editorial   / 2018 ஜூலை 10 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

வினைத்திறனான சேவையை மக்களுக்கு வழங்கும் நோக்கோடு, அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டாரத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற, பட்டியல் மூலம் தெரிவான மற்றும் தொங்கும் நிலை முறையில் தெரிவான உறுப்பினர்களுக்கான விசேட முழுநாள் செயலமர்வு, மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதயம் மண்டபத்தில் நேற்று (09) நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளணியும் பயிற்சி அலுவலகம் மற்றும் உள்ளூராட்சி மன்றத்துடன் இணைந்து, இச்செயலமர்வை நடத்தின.

வளவாளராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. குணநாதன் கலந்துகொண்டு, இலங்கையின் உள்ளூராட்சி முறை, உள்ளூராட்சி நிறுவனங்களில் சபைக் கூட்டங்களை நடத்துதல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் எனும் தலைப்புகளில் தெளிவுபடுத்தினார்.

கிழக்கு மாகாண ஆளணி மற்றும் பயிற்சி அலுவலக பிரதிப் பிரதம செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை மற்றும் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டவர்கள் பயன்பெற்றதோடு, அவர்களின் சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டன.

இதன்போது, உள்ளூர் அபிவிருத்திக்கு நல்லாட்சி எனும் தலைப்பில் பயிற்சிக் கையேடு, நாடாளுமன்றத்தால் திருத்தப்பட்ட மாநகரசபை கட்டளைச் சட்டங்கள் கையேடு என்பன வழங்கப்பட்டன.

இதேவேளை, இதேபோன்றதொரு செயலமர்வு, கல்முனை மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களுக்காக, அக்கரைப்பற்று மாநகர சபையில் எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X