2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Freelancer   / 2025 பெப்ரவரி 01 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரவணன்

மட்டக்களப்பிலிருந்து  தமிழரசு கட்சியின்  மறைந்த தலைவர்  மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்துகொள்வதற்காக பயணித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து, இன்று (1), திருகோணமலை- உப்புவெளி பிரதேசத்தில் இடம்பெற்றது.

 திருகோணமலை - உப்புவெளி  வீதியின் சர்வோதயத்துக்கு முன்னாள் உள்ள பாதைசாரி கடவையில் பொதுமக்கள் கடக்கின்ற போது, கருணாகரம் ஜனா பயணித்த வாகனத்தை நிறுத்திய போது பின்னால் அதிகவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுபாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்ட அந்த வாகனத்தின் பின் பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.AN


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X