2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், நடராஜன் ஹரன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கொக்கட்டிச்சோலை -மண்முனை பிரதான வீதியில், இன்று (19) காலை இடம்பெற்ற விபத்தில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

நாவற்குடா, 3ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய மாணிக்கவாசகம் ஜெயக்குமார் என்பவரே உயிரிழந்தவராவார்.

கொக்கடிச்சோலையிலிருந்து மண்முனை நோக்கிச் சென்ற சிறிய ரக படி லொறியும் நாவற்குடாவிலிருந்து கொக்கட்டிச்சோலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதுண்டதிலேயே, இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணிக்கவாசகம் ஜெயக்குமார் படுகாயமடைந்த நிலையில், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போது உயிரிழந்துள்ளார்.

லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X