2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

விபத்தில் ஓட்டோ சாரதி உயிரிழப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில், சொகுசு காரும் ஓட்டோவும் நேற்று (26) இரவு மோதியதில் ஓட்டோ சாரதியான  திருகோணமலை - சோனக வாடி, மூர் வீதியைச் சேர்ந்த நடராசா அனுஷாந்தன் (31 வயது) உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சொகுசு கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஓட்டோவில் மோதி, மற்றுமொரு வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளது.

ஓட்டோ சாரதி படுகாயம் அடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய சொகுசு காரின் சாரதியைக் கைதுசெய்துள்ள  திருகோணமலை தலைமையக பொலிஸார், விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .