Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் பிரதியமைச்சர் ஒருவரின் இணைப்பாளரின் பிக்கப் வாகனம் மோதியதில் தாயும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் திங்கட்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பிக்கப் வாகனம், மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது மோதியுள்ளது. இதன்போது, குறித்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணும் அவரது ஐந்து வயது மகனும் படுகாயமடைந்த நிலையில், பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
31 minute ago
37 minute ago