2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மரணம்

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு - தாண்டவன்வெளி சந்தியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன், இன்று (24) உயிரிழந்துள்ளார்.

தாண்டவன்வெளி சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயமடைந்தனர்.

மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியை சேர்ந்த எஸ்.மதுசன் எனும் 25 வயது இளைஞன் கவலைக்கிடமான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மதுபான போத்தல்களை கொண்டுசென்ற நிலையில் விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் நபரொருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாரென, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X