Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வீதி விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மட்டக்களப்பு – வாகரைப் பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு ஆரையம்பதியை வசிப்பிடமாகக் கொண்ட ஜெகநாதன் காண்டீபன் (வயது 44) என்பவரே உயிரிழந்தவராவார்.
அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இவர் கடந்த 2 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் கடமை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது புல்லாவி என்னும் இடத்தில் வாகனமொன்றினால் மோதப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக உதவிக்கு விரைந்தவர்களால் அவர் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பயனின்றி நேற்றிரவு (08) மரணமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக விபத்தை ஏற்படுத்திய வாகனம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளில் வாகரைப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago