Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 19 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஆரையம்பதி, மண்முனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவன் சம்பவ இடத்தில் பலியானதுடன், மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்த நிலையில்> மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்; எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
தாழங்குடாவைச் சேர்ந்தவர்களான புவனசிங்கம் சதீஸ் (வயது 17) என்ற மாணவன் பலியான அதேவேளை, கனேந்திரன் யோயல் (வயது 18) என்ற மாணவன் படுகாயமடைந்துள்ளான். இந்த விபத்தில் பலியான மாணவன் இம்முறை க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் புதிததாகக் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளில் புவனசிங்கம் சதீஸ் என்ற மாணவன் தனது நண்பனுடன் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு பயணித்துள்ளான்;. இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், மண்முனைப் பாலத்துக்கு அருகில் காணப்பட்ட மின்கம்பமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது> குறித்த மோட்டார் சைக்கிளும் சுக்குநூறாக உடைந்து சேதமாகியுள்ளது.
அதிகூடிய வேகமே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரியவருகின்றது எனத் தெரிவித்த பொலிஸார், இந்த விபத்துத் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
25 minute ago
32 minute ago
34 minute ago