2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Editorial   / 2018 மார்ச் 02 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

செங்கலடி -  பதுளை வீதி, கொடுவாமடு பகுதியில் இன்று (02) இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்   அனுமதிக்கப்பட்டுள்ளனரென, கரடியனாறு பொலிஸார் தெரித்தனர்.

பன்குடாவெளியிலிருந்து, செங்கலடி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள்,காயன்குடாவிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்த துவிச்சகரவண்டியின் பின்புறத்தில் மோதி,வேகக் கட்டுபாட்டை இழந்த நிலையில் எதிர்த் திசையிலிருந்து வந்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

விபத்தில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த பன்குடாவெளி குளனியைச் சேர்ந்த க.கணேஸ்வரன் (வயது 23), எஸ்.சிந்துஜன் (வயது 24), துவிச்சக்கர வண்டியில் பயணித்த அ.அரசரெத்தினம் (வயது 54) ஆகியோர் காயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிற்சைகளுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை,  கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X