2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விமானப்படை தளத்துக்குள் நுழைந்தவர் கைது

Editorial   / 2022 ஜனவரி 26 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு விமான நிலைய விமானபடைத் தளத்துக்குள் விமானப்படையின் சோதனைச்சாவடி ஊடாக, அனுமதியின்றி உள்நுழைந்த ஆண்ணொருவர் இன்று (26) காலையில் கைது செய்து, ஒப்படைக்கப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விமான நிலையத்தில் பல்வேறு தரப்பட்ட வேலைகளில் ஊழியர்களாக வேலை செய்துவரும் பணியாளர்கள் தினமும் விமான நிலையம் சென்று பணியாற்றிவிட்டு மாலையில் வீடுதிரும்பி வருவது வழக்கமாகும்.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று காலை 8 மணியளவில் வழமைபோல விமான நிலையத்துக்கு வேலைக்கு செல்லும் பணியாளர்களுடன் பணியாளராக விமான நிலைத்திற்குள் விமானப்படையின் சோதனைச்சாவடி ஊடாக வாழைச்சேனை மீராவேரடயைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் நுழைந்துள்ளார்.

இவ்வாறு உள்நுழைந்தவர் அங்குள்ள விமானபடை தளப்பகுதிக்கு சென்ற நிலையில் சந்தேகம் கொண்ட விமானப்படையினர் குறித்த நபரிடம், அனுமதி அட்டையைக் கேட்டுள்ளனர். அவர் தேசிய அடையாள அட்டையை காட்டினார். அதனையடுத்தே, சந்தேகம் கொண்டு  அவரை கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பிரதேச செயலத்தில் கடமையாற்றிவரும் அந்நபர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மனைவியை கொண்டுவந்து விட்டுவிட்டுள்ளார்.  அதன் பின்னர் விமான நிலையத்தை பார்ப்பதற்காக, இவ்வாறு​ சென்றுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்த விமானப்படையினர், மேலதிக விசாரணைகளுக்காக தம்மிடம் ஒப்படைத்துள்ளனர் என்று தெரிவித்த மட்டு தலைமையக பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X